திமுக எம்பி கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டாலும் அவர் தமிழகம் முழுவதும் பரவலாக பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். நேற்று கரூர் தொகுதியில் ஜோதிமணிக்காக பிரச்சாரம் செய்த கனிமொழி இன்று கோவையில் பிரச்சாரம் செய்து வருகிறார், அவர் இந்த பிரச்சாரத்தில் கூறியதாவதுள்
திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி சிக்கல்கள், குளறுபடிகள் தீர்க்கப்படும். அம்பானிக்கும், அதானிக்குமான ஆட்சி தான் பாஜக ஆட்சி. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும் என்று பேசினார்.