இந்த அரசு விழாவில் பிரதமர் மோடி ,ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருந்த நிலையில் தற்போது தூத்துக்குடி எம்பி கனிமொழி இந்த விழாவில் கலந்து கொள்ளும் நபர்களின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி, திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தாலும் கனிமொழி மீது அவர் தனிப்பட்ட பாசம் வைத்துள்ளதாகவும் அவர் மீது எப்போதும் அவர் மரியாதை வைத்திருப்பதாகவும் கூறப்பட்டது. அந்த வகையில் தான் தூத்துக்குடி அரசு விழாவில் பங்கேற்க கனிமொழிக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது என்பதும் அவரும் இன்று நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.