விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில், இதற்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் கூட்டணி, தொகுதிபங்கீடு, வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவர் கூறியதாவது: விரைவில் அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகவுள்ளது. தேர்தல் வாக்குறுதி எதுவும் நிறைவேற்றாமல் திமுக சிலிண்டர் விலை குறைப்பு பற்றி பேசக்கூடாது. காங்கிரஸ் கட்சியின் கடைசி தேர்தல் இது. போதைப்பொருள் விவகாரத்தில் தேடப்படும் ஜாபர் சாதி, திமுகவின் அயலக அணியில் இருந்தவர் ..இதுகுறித்து திமுக எந்தக் கருத்தும் கூறாமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், கோவையில் நான் போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் விரும்பினாலும், ஒரு மாநில தலைவராக தனக்கு பல கடமைகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.