மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப்.. HP, Dell, மற்றும் Acer நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..!

Mahendran

வெள்ளி, 31 அக்டோபர் 2025 (13:52 IST)
தமிழக கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசு மூன்று முன்னணி நிறுவனங்களுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தப் பணி ஆணை வழங்கியுள்ளது.
 
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் மொத்தம் 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு மின்னணுவியல் கழகம் (எல்காட்), முதல் கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது.
 
இந்தக் கொள்முதலுக்காக HP, Dell, மற்றும் Acer ஆகிய மூன்று பெரிய நிறுவனங்களுக்கு எல்காட் ஒப்பந்த ஆணை வழங்கியுள்ளது.
 
மடிக்கணினிகளின் மாதிரி வடிவங்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் இறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, முதல் கட்டமான 10 லட்சம் மடிக்கணினிகளை வரும் மார்ச் மாதத்திற்குள் கொள்முதல் செய்து மாணவர்களுக்கு விநியோகிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
 
இந்த நடவடிக்கை, தமிழக மாணவர்களிடையே டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்தி, தொழில்நுட்ப வசதிகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்