தமிழகத்தை யாராலும் பிரிக்க முடியாது: கனிமொழி எம்பி

Webdunia
ஞாயிறு, 11 ஜூலை 2021 (12:41 IST)
மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி வெறுப்பேற்றும் வரும் திமுகவுக்கு பதிலடியாக தமிழகத்தை இரண்டாக பிரித்து கொங்கு நாடு என்று உருவாக்க வேண்டும் என பாஜக தரப்பில் இருந்து குரல் எழுந்து வருகிறது. இதனால் திமுக தரப்பினர் அதிர்ச்சி அடைந்து இருக்கும் நிலையில் தமிழகத்தை யாராலும் பிரிக்க முடியாது என்றும் அதனால் யாரும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் நம்முடைய பெருமை மற்றும் உரிமைகளுக்காக திமுக அரசு தொடர்ந்து போராடும் என்றும் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார் 
 
இன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வீரர் அழகுமுத்துக்கோன் மணி மண்டபத்தில் இருக்கும் திருவுருவச் சிலையை கனிமொழி எம்பி திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பல திமுக பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி கூறியதாவது:
 
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர்ந்து தமிழின் பெருமையையும், உரிமைகளையும் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து போராடும் என்றும் அவர் தெரிவித்தார் 
 
மேலும் தமிழகத்தை யாரும் பிரிக்க முடியாது என்றும், அந்த கனவு எல்லாம் நிறைவேற வாய்ப்பே இல்லை என்றும், ஆகையால் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் தெரிவித்த அவர் அரசியல் சட்டத்தில் மத்திய அரசை ஒன்றிய அரசு என்றுதான் குறிப்பிட்டுள்ளது என்றும் அதனால் ஒன்றிய அரசு என்று கூறுவது தவறு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்