ஊரடங்கில் மேலும் தளர்வுகள்… ஆனால் திரையரங்குகளுக்கு!

சனி, 10 ஜூலை 2021 (16:58 IST)
தமிழகத்தில் ஜூலை 19 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலையை ஒட்டி அமலாக்கப்பட்ட ஊரடங்கு இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதையொட்டி ஜூலை 19 ஆம் தேதி வரைக்குமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் கடைகளுக்கு கூடுதல் நேரம் உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

ஆனாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரையரங்குகளுக்கான அனுமதி வழங்கப்படவில்லை. ஜூலை 15 ஆம் தேதிக்கு மேல் திரையரங்குகளுக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருந்த திரையுலகினருக்கு இது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்