அது சம்பந்தமாக பத்திரிகையாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை நெறியாளர் கார்த்திகை செல்வனை பற்றியும் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் பற்றியும் கடுமையாக விமர்சித்தார். இதற்கு ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், திமுக எம்பி கனிமொழி அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், அண்மையில் பாஜக தலைவர் திரு. அண்ணாமலை ஒரு மாநிலத்தின் அமைச்சர் குறித்தும், மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் குறித்தும் தரம் தாழ்ந்த வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தொடர்ந்து இவ்வாறு ஒருவர் பேசிவருவது அரசியலின் தரத்தையே தாழ்த்துகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.