இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி நடித்த முதல் படமான விருமன் அதிரி புதிரி ஹிட் அடித்துள்ளது. இதையடுத்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதையடுத்து அவர் தமிழ் சினிமாவின் வளரும் இளம் நடிகைகளில் ஒருவராகியுள்ளார்.
மேலும் சமூகவலைதளங்களில் அதிகளவில் ரசிகர்கள் அவரைப் பின் தொடர தொடங்கியுள்ளனர். இந்நிலையில் விருமன் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த அதிதி, மாவீரன் படத்தில் பத்திரிகை நிரூபராக நடித்து வித்தியாசத்தைக் காட்டினார்.
அதன் பிறகு பெரிதாக அவர் எந்த படங்களிலும் கமிட்டாகவில்லை. இந்நிலையில் இப்போது அவர் லைகா தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.