தேர்தல் முடிந்தவுடன் கனிமொழி துணை பிரதமர்: சொன்னவர் யார் தெரியுமா?

திங்கள், 4 மார்ச் 2019 (15:53 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் கனிமொழி தான் இந்தியாவின் துணை பிரதமர் என முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 
ராஜ்யசபா எம்பியின் பதவிக்காலம் முடிவடைவதால் முதல்முறையாக மக்களவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்த கனிமொழி, கடந்த ஒரு வருடமாக தூத்துகுடி தொகுதியை குறிவைத்து, அந்த தொகுதி மக்களை சந்திக்க அடிக்கடி தூத்துகுடி சென்று வந்தார்
 
இந்த நிலையில் இன்று தூத்துகுடி தொகுதியில் போட்டியிட அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு கொடுத்தார் கனிமொழி. அப்போது அவருடன் வந்திருந்த திமுக முன்னாள் அமைச்சரும் தூத்துகுடியை சேர்ந்தவருமான அனிதா ராதாகிருஷ்ணன் கூறியபோது, 'தூத்துகுடி தொகுதியில் கனிமொழி சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதுமட்டுமின்றி அவர்தான் நாட்டின் துணை பிரதமரும் ஆவார் என்று கூறினார்.
 
தூத்துகுடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து பாஜக வேட்பாளராக தமிழிசை செளந்திரராஜன் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. மேலும் இதே தொகுதியில் நடிகை ராதிகாவும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்