சீர்காழி கொலை வழக்கில் துரிதமாக இயங்கிய காவல்துறை! – கமல்ஹாசன் பாராட்டு!

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (10:48 IST)
சீர்காழியில் நகை கடை ஊழியர் வீட்டில் கொலை செய்து கொள்ளையடித்த சம்பவத்தில் போலீஸார் உடனடியாக கொள்ளையர்களை பிடித்ததற்கு மநீம தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சீர்காழியில் நகைக்கடை உரிமையாளரின் மனைவி மற்றும் மகனை கொன்று 17 கிலோ நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளை கும்பலை போலீஸார் 5 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்தனர். கொள்ளையர்களை விரட்டி செல்கையில் ஒரு கொள்ளையன் என்கவுண்ட்டர் செய்யப்பட்டான்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பதிவிட்டுள்ள கமல்ஹாசன் “வடமாநில கொள்ளையர்களின் படுபாதக கொலைகள் நெஞ்சைப் பதற வைக்கின்றன. சீர்காழி கொலையில் காவல்துறையினரின் விரைவான செயல்பாடு பாராட்டுக்குரியது. ஆனால், வரும் முன் காக்கும் வகையில் பாதுகாப்பு சோதனைகளும், புலனாய்வுகளும், இரவு ரோந்துப் பணிகளும் முடுக்கிவிடப்பட வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்