களத்தில் சந்திப்போம்… வெற்றி நமதே..! – பிரச்சாரத்திற்கு கிளம்பும் கமல்ஹாசன்!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (10:32 IST)
தமிழக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது. 9 மாவட்டங்களிலும் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். களத்தில் சந்திப்போம். வெற்றி நமதே” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்