பைசா செலவில்லாம பப்ளிசிட்டி; மய்யம் லோகோவை கோர்ட்டில் ஒட்டி வந்த பிக்பாஸ்!

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2020 (11:50 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது கட்சி லோகோ கொண்ட கோர்ட்டை கமல்ஹாசன் அணிந்து வந்தது வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தலுக்கு தயராகி வருகின்றன. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஒருபக்கம் கட்சி பணிகளை கவனித்துக் கொண்டு மறுபுறம் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வருகிறார் கமல்ஹாசன்.

இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த கமல்ஹாசன் தனது கோர்ட் கைப்பட்டையில் மக்கள் நீதி மய்யத்தின் லோகோவை ஒட்டி வந்திருந்தார். முதலில் பூ போன்ற டிசைனாக தெரிந்தாலும் பின்னர் மக்கள் நீதி மய்யம் லோகா என அறிந்த நெட்டிசன்கள், மய்யத்தார் பைசா செலவில்லாமல் தனது லோகோவை பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலபடுத்தி விட்டார் என கிண்டலாக கூறி வருகின்றனர்.

அதேசமயம் வேறு கட்சியை சேர்ந்த சிலர் ‘ஒரு தொலைக்காட்சியில் அனுமதியின்றி இப்படி மறைமுகமாக கட்சியை ப்ரொமோட் செய்யலாமா? இதை தனியார் தொலைக்காட்சி கவனிக்கவில்லையா?” என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்