கமல்ஹாசன். தினகரன் மீது வழக்குப் பதிவு...தொண்டர்கள் அதிர்ச்சி

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (19:01 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் ஐஜேகே மற்றும் சமகவுடன் கூட்டணி வைத்துள்ளது.. தினகரனின் அமமுக, தேமுதிக மற்றும் ஒவைசியின் எஐஎம்ஐஎம் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது.

இந்நிலையில் திருச்சி பிரச்சாரத்தின்போது, திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் நீதி மையம் வேட்பாளர் வீர்சக்திக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிக்கச் சென்றபோது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறியதாக கமல்ஹாசன் உள்ளிட்ட 650 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று நேற்று முன்தினம் அமமுக பொதுச்செயலாளர் தினகரன், திருச்சி அண்ணாசிலை காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளீல் கொரோன தடுப்பு நடவடிக்கைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக தினகரன்  உள்ளிட்ட 1500 பேர் மீது திருச்சி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்