தற்காப்பு முக்கியமில்லை..தன்மானமே முக்கியம் - யாரை சீண்டுகிறார் கமல்ஹாசன்?

வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (08:17 IST)
திமுக சார்பில் நேற்று நடைபெற்ற முரசொலி பவள விழாவில் நடிகர் கமல்ஹாசன் நேற்று கலந்து கொண்டு பேசினார்.


 

 
கமல்ஹாசனுக்கு மேடையில் அமர வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ரஜினிகாந்தோ பார்வையாளர் மத்தியில் அமர்ந்திருந்தார். அந்நிலையில், கமல்ஹாசன் போதும்போது “ ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சிக்கு வருகிறாரா எனக் கேட்டேன். அவர் வருகிறார் ஆனால் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருப்பார்..பேசவில்லை என்றார்கள். அப்போது நானும் கீழே அவருடன் அமர்ந்து கொள்கிறேன் என்றேன். ஏனெனில் ரஜினியோடு அமர்ந்து கொண்டால், மேடையில் பேசுவதை தவிர்த்து, எந்த சிக்கலிலும்  மாட்டாமல் தப்பித்துக்கொள்ளலாம் என நினைத்தேன். அதன் பின் கண்ணாடியை பார்த்தேன். முட்டாள் இது எவ்வளவு பெரிய வாய்ப்பு. எவ்வளவு பெரிய மேடை. இங்கே பேசாவிட்டால் எங்கே பேசுவது. இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது’ எனத் தோன்றியது. தற்காப்பு முக்கியம் அல்ல.. தன்மானமே முக்கியம்” என அவர் பேசினார்.
 
அவரின் இந்த பேச்சு, பிரச்சனைகளில் சிக்காமல் தள்ளி இருக்க விரும்பும் ரஜினியை குறிப்பிடுவதாக பலரும் கூறிவருகிறார்கள். இல்லை, தமிழக அரசை மத்திய அரசு கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. இரு அணிகளும் இணைய மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு தமிழக அரசியல்வாதிகள் இடம் கொடுக்கக்கூடாது. இந்த சூழ்நிலையைத்தான் கமல்ஹாசன் கூறியிருக்கிறார் எனவும் சிலர் கருத்து கூறி வருகிறார்கள்.
 
நேற்று இரவு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “விம்மாமல் பம்மாமல், ஆவன செய். புரட்சியின் வித்து தனிச் சிந்தனயே. ஓடி எனைப்பின்தள்ளாதே. களைத்தெனைத்தாமதிக்காதே. கூடி நட, வெல்வது நானில்லை நாம்” என கமல்ஹாசன் குறிப்பிடிருப்பது கூட ரஜினியை மனதில் வைத்துதான் என பலரும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்