ரஜினிக்கு மறைமுக அழைப்பு விடுக்கின்றாரா கமல்?

வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (23:45 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் தன்னை தமிழ் புத்திசாலியாக காண்பித்து கொள்வதில் வல்லவர். அவருடைய படமும் சரி, டுவிட்டுகளும் சரி யாருக்கும் புரிந்துவிட கூடாது என்பதில் கவனமாக இருப்பார். இந்த நிலையில் இன்று ரஜினியுடன் இணைந்து முரசொலி பவளவிழாவில் கலந்து கொண்ட பின்னர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதிவு செய்தததாவது:



 
 
விம்மாமல் பம்மாமல், ஆவன செ்ய். புரட்சியின் வித்து தனிச் சிந்தனயே.ஓடி எனைப்பின்தள்ளாதே
களைத்தெனைத்தாமதிக்காதே. கூடி நட, வெல்வது நானில்லை நாம்
 
பரிந்தவர் புரியாதோர்க்குப் புகட்டுக. நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே.மூப்பெய்தி மாளும் முன். சுதந்திரம் பழகு . தேசியமும் தான்.
 
இதில் இரண்டாவது டுவீட் அனேகமாக அனைவருக்கும் புரியும். எனவே முதல் டுவீட் குறித்து பார்ப்போம்,என்னிடம் ஒரு புரட்சி கருத்து உள்ளது. எனவே என்னையும் சேர்த்து அரசியல் பாதையில் நட. என்னை பின்னால் தள்ளிவிட்டு நீ மட்டும் முன்னுக்கு செல்லாதே. சேர்ந்தே செல்வோம், நாளை நம்முடைய ஆட்சி. அனேகமாக அவர் சொல்ல வந்த கருத்து இதுதான். இந்த டுவீட் முழுக்க முழுக்க ரஜினிக்கு மறைமுகமாக சொல்ல வந்தது போல்தான் உள்ளது. ஆனால் இது ரஜினிக்கு புரியுமா?

வெப்துனியாவைப் படிக்கவும்