எளியோர் துயர்துடைக்கும் நண்பர் - விஜயகாந்திற்கு கமல் வாழ்த்து!

புதன், 25 ஆகஸ்ட் 2021 (14:02 IST)
தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளான இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
இன்று நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் பிறந்தநாள் அவரது தொண்டர்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரது பிறந்தநாளுக்கு மற்ற கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
விஜயகாந்த் பிறந்தநாளில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், எளியோருக்குப் பாதிப்பு என்றால் தன் வரம்பில் இயன்றதை அதிரடியாகவும் உடனடியாகவும் செய்து துயர்துடைக்கும் மனம் வாய்ந்த நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்