ஸ்டாலினுக்கு டஃப் கொடுக்க போகும் கமல்; பிரபல ஜோதிடர் கணிப்பு

வெள்ளி, 10 நவம்பர் 2017 (15:57 IST)
கமல்ஹாசன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை விட சிறப்பான இடத்துக்கு வந்து முதல்வர் ஆவார் என டெல்லியைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் ராடன் பண்டிட் தெரிவித்துள்ளார்.


 

 
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வர போவதாக அறிவித்த நாள்முதல் தமிழக அட்சியாளர்கள் மற்றும் பாஜகவினர் அவரை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அவர் கட்சி தொடங்குவதற்கு முன்பே சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். டெல்லி முதல்வர், கேரள முதல்வர் ஆகியோரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
 
கொல்கத்தா சென்றுள்ள கமல் இன்று மாலை மேற்கு வங்க முதல்வர் மம்தாவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கமல், தான் கட்சி தொடங்குவதற்கான நிதி அனைத்தையும் தொண்டர்களும், ரசிகர்களும் தருவார்கள் என தெரிவித்து இருந்தார்.
 
கமல் பிறந்தநாளையொட்டி கடந்த 6ஆம் தேதி டெல்லியைச் சேர்ந்த ஜோதிடர் ராடன் பண்டிட் என்பவர் தனது யூடியூப் சேனலில் கமல் குறித்த சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
 
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப சினிமா நட்சத்திரங்களில் அடுத்த அதிர்ஷ்டசாலி யார் என்பது குறித்து ஆராய்ந்தேன். அப்போது கமலின் ஜாதகத்தை பார்த்தேன். அவர் நல்ல நிர்வாகி. பிடிவாதம் குணம் உள்ளவர். இவரது ஜாதகம் யோக ஜாதகம்.
 
இவருக்கு 20 ஆண்டுகளுக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உள்ளது. அரசியலுக்கு வருவதற்கு யோசிப்பார். ஆனால் நிச்சயம் வருவார். கடுமையான போராளி தோல்வி அடைந்தலும் அதிலிருந்து மீண்டு வந்து வெற்றி காண்பார். ஸ்டாலினை விட சிறப்பான இடத்துக்கு வந்து முதல்வர் ஆவார். 
 
இவ்வாறு அந்த ஜோதிடர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்