திமுக தலைவர் கருணாநிதி வயது முதிர்வின் காரணமாகவும், உடல் நலக்குறைவின் காரணமாகவும் தீவிர அரசியலில் ஈடுபடாமல் அவரது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வில் இருந்து வருகிறார். அவரை சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி வீட்டுக்கு சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி திமுக, பாஜக கூட்டணி குறித்து பேசினார். அப்போது அவர், கருணாநிதியை பிரதமர் மோடி அரசியல் நாகரிகத்துடன் சந்தித்தார். யார் உடல்நலக் குறைவுடன் இருந்தாலும் அவர்களை சந்திப்பது வழக்கம். மேலும் திமுக - பாஜக கூட்டணி அமையாது. ஒருமுறை நடந்த தவறு இனி நடக்காது என்றார்.