மக்களின் குரல் என்றும் வெல்லும்: ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து கமல்

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (11:46 IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்த தீர்ப்பு இன்று அளிக்கப்படும் என நேற்றே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் தனது டுவிட்டரில் ஒரு ட்வீட்டை பதிவு செய்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் சற்று முன் சென்னை ஐகோர்ட் ஸ்டெர்லைட் குறித்த தீர்ப்பை வழங்கியது என்பதும், அந்த தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு விதித்த தடை தொடரும் என்றும் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்து தற்போது கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
ஸ்டெர்லைட் தடை தொடரும் என்கின்ற நீதிமன்றத் தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி. இத்தீர்ப்பின் அவசியத்தை, அவர்களின் வலியை, அருகில் இருந்து உணர்ந்த சகோதரன் நான். மக்களின் குரல் என்றும் வெல்லும் என்பதற்கு இது மற்றுமொரு சான்று.
 
ஏற்கனவே ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியான போது கமல்ஹாசன் நேரடியாக தூத்துகுடி சென்று பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்