டி.என்.சேஷனுடன் கமல் திடீர் சந்திப்பு

Webdunia
வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (16:38 IST)
முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷனை சற்றுமுன் கமல்ஹாசன் அவரது இல்லத்தில் சந்தித்தார். இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும் கமல்ஹாசன் ஆரம்பிக்கவுள்ள கட்சியில் டி.என்.சேஷன் சேர விரும்புவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் டி.என்.சேஷனின் சந்திப்புக்க்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல், 'நல்ல உடல் நலத்துடன் இருந்திருந்தால், தங்கள் கட்சியின் இணைந்திருப்பேன் என டி.என்.சேஷன் கூறியதாக தெரிவித்தார். எனவே வரும் பிப்ரவரி 21ஆம் தேதி கமல் கட்சியில் அவர் சேர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் வரும் 21ஆம் தேதி கட்சியின் பெயரை அறிவிப்பது உறுதி என்று கமல்ஹாசன் தெரிவித்தார். கமல்ஹாசனின் கட்சி தொடங்கும் தினத்தன்று டி.என்.சேஷன் மட்டுமின்றி பல முன்னாள் ஐஏஸ் அதிகாரிகள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்