நேற்று முந்தினம் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர் தினம் என்பது காதலர்களுக்கு மட்டும் அல்லாமல் தம்பதியினரும் கொண்டாடினர். அந்த வகையில், தாய்லாந்து நாட்டில் வாழும் தம்பதியினருக்கு அந்நாட்டு அரசு வழங்கிய பரிசு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், தாய்லாந்து நாட்டில் மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக அந்நாட்டில் வாழும் தம்பதியினருக்கு வைட்டமின் மாத்திரைகள் அரசால் வழங்கப்பட்டது. தாய்லாந்தில் மக்கள் தொகை குறைந்துவருவதால் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.