கமல் ஒரு குறுகிய கால அரசியல் தலைவர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2017 (14:19 IST)
டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்து வரும் கமல்ஹாசன் ஒரு குறுகிய கால அரசியல் தலைவர் என்றும் டுவிட்டரில் பதிவு செய்பவர்கள் அனைவரும் வரலாறு படைத்துவிட முடியாது என்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.



 
 
ஜெயலலிதா இல்லாத வாய்ப்பை பயன்படுத்தி குறுகிய காலத்தில் அரசியல் தலைவராக பார்க்கிறார் கமல் என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஜெயலலிதா இருந்த காலத்தில் தமிழகம் பல்வேறு புயல்களில் பாதிக்கபட்டபோது கமல் எங்கே சென்றார்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் இந்த கருத்துக்கு கமல் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். டுவிட்டரில் அரசியல் செய்யும்போதே தாக்கு பிடிக்க முடியாத அரசியல் தலைவர்கள், அவர் நேரடியாக களத்தில் இறங்கினால் காணாமல் போய்விடுவார்கள்' என்று பதிலடி கொடுத்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்