அஜித்தின் ஜாதகத்தில் அரசியல் இருக்கின்றது. எஸ்.வி.சேகர்

புதன், 1 நவம்பர் 2017 (20:34 IST)
அரசியல் பக்கமே தலைவைத்து கூட படுக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று ஒதுங்கி அஜித் இருக்கும் நிலையில் அவருடைய ஜாதகத்தில் அரசியல் இருப்பதாகவும், அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்றும் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.



 
 
ஒருபக்கம் ரஜினி, கமல், விஜய் ஆகியோர் அரசியலில் நுழைந்து முதல்வர் ஆகிவிட வேண்டும் என்று அடியெடுத்து வைக்கும் நிலையில் அரசியலில் யார் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் எஸ்.வி.சேகரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
 
இதற்கு பதில் கூறிய எஸ்.வி.சேகர், ஜாதக ரீதியாக பார்த்தால் அஜித்துக்கு அரசியல் எதிர்காலம் அதிகம் உள்ளது. அவர் அரசியலுகு வந்தால் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று கூறியுள்ளார். மேலும் நமக்கு ஒரு தலைவர் வேண்டும், அது தல'யாகக்கூட இருக்கலாமே' என்று கூறியுள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்