கடமையை சரிவர செய்யாதவர்கள் சமூகத்த்ஹில் தன்னோட உரிமைகளை இழப்பார்கள். மாற்றம் வேண்டும், சிஸ்டம் சரி இல்லை, எல்லாரும் திருட்டு பயல்கள் என்று கூறும் பல பேர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லை. நாம் எல்லோருக்கும் இந்திய தேர்தல் ஆணையம் கொடுக்கும் அடையாளம் வாக்காளர் அடையாள அட்டை
நவம்பர் 21, 22 தேதிகளில் அல்லது டிசம்பர் 12 13 தேதிகளில் உங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் வாக்குச்சாவடியில் நடைபெறும் சிறப்பு முகாமுக்கு சென்று வாக்காளர் அடையாள அட்டை குறித்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை பெறுங்கள் என்று கமல்ஹாசன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்