இன்று மக்கள் நீதி மய்யம் ஆலோசனை கூட்டம்: திமுக கூட்டணியில் இடம்பெறுமா?

ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (13:30 IST)
இன்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த கூட்டத்தில் திமுக கூட்டணியில் இணைவது பற்றி ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது 
 
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி தொடங்கப்பட்டு ஒரு பாராளுமன்ற மற்றும் ஒரு சட்டசபை தேர்தலை சந்தித்து விட்டது என்பதும் இரண்டிலுமே கிட்டத்தட்ட தனித்து போட்டியிட்டது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் அடுத்து வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அமைச்சர் உதயநிதியுடன் நெருக்கமாக இருக்கும் கமலஹாசன் திமுக ஆட்சிக்கு எதிராக எந்தவித கருத்தையும் சொல்வதில்லை 
 
எனவே திமுக கூட்டணியில் இடம்பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது இன்றைய கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்