ரஜினி-கமல் திடீர் சந்திப்பு! அரசியல் கூட்டணியா?

Webdunia
ஞாயிறு, 18 பிப்ரவரி 2018 (15:24 IST)
நடிகர் கமல்ஹாசன் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி தனது அரசியல் கட்சியை தொடங்கி, சுற்றுப் பயணம் ஆரம்பிக்க உள்ள நிலையில், சற்றுமுன்னர் அவர் திடீரென ரஜினிகாந்தை அவர் இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இந்தச் சந்திப்பு குறித்து கமலஹாசன் கூறியபோது, என் வாழ்க்கையில் ஒரு முக்கிய பயணம் மேற்கொள்ள உள்ளேன். அது குறித்து மனதிற்கு பிடித்தவர்களிடம் சொல்லி வருகிறேன். அந்த வகையில் எனது பயணம் குறித்து  சொல்வதற்காக ரஜினியை சந்தித்தேன். ரஜினியை இன்று சந்தித்தது, நட்பு ரீதியலானது. அரசியல் குறித்து பேசவில்லை' என்று கூறினார்

மேலும் எனது கட்சியின் தொடக்க  விழாவிற்கு ரஜினியையும் அழைத்துள்ளேன். அவர் வருவாரா? இல்லையா? என்பது குறித்து நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்