கமல் கட்சிக்கு ஆட்கள் கிடைக்கவில்லை - அமைச்சர் கிண்டல்

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (19:09 IST)
சென்னை லயோலா கல்லூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அரசியல் செய்பவர்களால்  ஊழல் நடக்கிறது என்று பேசினார்.இந்நிலையில் கமல்ஹாசனுக்கு அதிமுக மூத்த தலைவர் மற்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராக பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை லயோலா கல்லூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பேசும் போது, அஅரசியலைப் பார்த்து மாணவர்கள் ஒதுங்கக் கூடாது ;  மாணவர்கள் அரசியல் பற்றி பேசாமல் கல்வியிலும், விவசாயத்திலும் முன்னேற முடியாது. அரசியல்வாதிகளே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள் என நினைத்ததால்தான் ஊழல் அதிகரித்து இருக்கிறது என்று தெரிவித்தார்.
 
இந்நிலையில் கமல்ஹாசனின் பேச்சுக்கு அமைச்சர் பாணியராஜ் கூறியுள்ளதாவது : நடிகர் கமல்ஹாசன், இளைஞர்களைப் பற்றி  ஆதங்கப்பட வேண்டாம் அவர்கள் அதிமுக பாசறையில் இணைந்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கமலின் கட்சிக்கு ஆட்கள் சேரவில்லை என்பதற்க்காக ஒன்றும் செய்ய முடியாது. இளைஞர்கள் இருக்க வேண்டிய இடத்தில் உள்ளனர். அவர்கள் விரும்பியபோது அரசியலுக்கு வருவர் எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்