இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர், ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய துயர சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி மனு அளித்தனர்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு அமைத்துள்ள சிபிசிஐடி விசாரணை தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அவர் கூறினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரை இடைநீக்கம் செய்வது, மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்வது என்பதோடு இந்த விவகாரத்தை முடித்துக்கொள்ள தமிழக அரசு முயல்கிறது என்றும் அவர்கள் உண்மையை மறைக்கிறார்கள் என்றும் தமிழிசை தெரிவித்தார்.