’மாமன்னன்’ சுத்த ப்ளாப் படம், திமுகவினர் மட்டுமே பார்க்கின்றனர்.. ஜெயக்குமார்

வெள்ளி, 30 ஜூன் 2023 (14:36 IST)
’மாமன்னன்’ திரைப்படம் சுத்த ப்ளாப் படம் என்றும், அந்த படத்தை திமுகவினர் மட்டுமே பார்க்கிறார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
 
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ’மாமன்னன்’ திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படம் சூப்பராக இருப்பதாக ஒரு சிலரும் சுமாராக இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். 
 
ஆனால் அதே நேரத்தில் இந்த படம் வெளியான முதல் நாள்: ரூபாய் ஆறு கோடி ரூபாய் தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படம் குறித்து பல்வேறு அரசியல்வாதிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் இந்த படம் சுத்த பிளாப் என்றும் இந்த படத்தை திமுகவினர் மட்டுமே பார்த்து வருகின்றனர் இன்னும் தெரிவித்துள்ளார். 
 
மேலும் இந்த படம் நூறாண்டு திரைப்படம் என்று அவர்களே போற்றிக் கொள்ள வேண்டியதுதான் என்றும் அவர் கூறியுள்ளார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்