திராவிட கழக தலைவர் கி வீரமணிக்கு கொரோனா: அப்பல்லோவில் அனுமதி!

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (14:17 IST)
திராவிட கழக தலைவர் கி வீரமணி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் 
 
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஏராளமான கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திராவிட கழக தலைவர் கி வீரமணி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
 
இன்று காலை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்