கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி குறித்த அறிவிப்பை சற்றுமுன் மின்வாரியம் அறிவித்துள்ளது
மேலும் கடந்த 19ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மின் கணக்கீட்டு தேதி உள்ள நுகர்வோர்களுக்கு, முந்தைய மாத மின் கட்டணம் கணக்கிடப்படும் எனவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கட்டண வசூல் மையங்கள் வரும் 30 ஆம் தேதி வரை செயல்படாது என்றும், அதனால் இணையதளம் வாயிலாக மின் கட்டணத்தை செலுத்துமாறும் மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.