வந்தாரை வாழவைக்கும் சென்னையில் கொரோனாவும் வாழட்டும்: உதயநிதி டுவீட்

சனி, 20 ஜூன் 2020 (17:04 IST)
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவ்வபோது தனது டுவிட்டரில் ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக கொரோனா வைரசுக்கு எதிராக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகம் விமர்சனம் செய்து வருகிறார்.
 
இந்த நிலையில் சற்றுமுன் உதயநிதி பதிவு செய்த ஒரு டுவீட்டில் ‘தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 ஆயிரம் பேரில் 40 ஆயிரம் பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்’ என்கிறது அரசு. உண்மை நிலவரமோ அச்சுறுத்துகின்றன. ‘வந்தாரை வாழவைக்கும் சென்னை’ என்பார்கள். ‘கொரோனாவும் வாழ்ந்துவிட்டுப் போகட்டும்’ என்று 
தமிழக முதல்வர் விட்டுவிட்டாரோ என்னவோ’ என்று பதிவு செய்துள்ளார்.
 
உதயநிதி ஸ்டாலினின் இந்த டுவிட்டுக்கு கமெண்டுக்கள் குவிந்து வருகிறது. அதில் பெரும்பாலான கமெண்ட்டுக்கள் ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பலர் சென்னையின் பரிதாபமான நிலை குறித்து வருத்தத்துடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
 

‘தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 ஆயிரம் பேரில் 40 ஆயிரம் பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்’ என்கிறது அரசு. உண்மை நிலவரமோ அச்சுறுத்துகின்றன. ‘வந்தாரை வாழவைக்கும் சென்னை’ என்பார்கள். ‘கொரோனாவும் வாழ்ந்துவிட்டுப் போகட்டும்’ என்று @CMOTamilNadu விட்டுவிட்டாரோ என்னவோ? #SaveChennai

— Udhay (@Udhaystalin) June 20, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்