கொரோனா சிகிச்சைக்காக மாணவர் விடுதிகளை தர முடியாது: அண்ணா பல்கலை அதிரடி

சனி, 20 ஜூன் 2020 (12:45 IST)
கொரோனா சிகிச்சைக்காக மாணவர் விடுதிகளை தர முடியாது
சென்னையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் பரவி வருவதை அடுத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மட்டுமின்றி தனியார் கல்லூரிகள் தனியார் திருமண மண்டபங்கள் உள்பட பல இடங்களில் கொரோனா முகாம் அமைக்கப்பட்டு அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் பரிசோதனை செய்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அந்த வகையில் கொரோனா சிகிச்சைக்காக அண்ணா பல்கலைகழகம் மாணவர் விடுதியை ஒப்படைக்க வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை மாநகராட்சி ஆணையர் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்திற்கு பதில் அளித்து அண்ணா பல்கலைக்கழகம் ’மாணவர்களின் பொருட்கள் அந்த விடுதியில் இருப்பதால் உடனடியாக காலி செய்து அந்த கட்டடத்தை ஒப்படைக்க முடியாது என்று பதில் அளித்தது
 
இந்த நிலையில் இதற்கு சென்னை மாநகராட்சி அதிரடியாக நாளைக்குள் மாணவர் விடுதியை ஒப்படைக்காவிட்டால் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் சற்று முன்னர் அதிரடியாக கொரோனா சிகிச்சைக்காக மாணவர் விடுதியை தரமுடியாது என்று பதிலளித்துள்ளது. மேலும் பல்கலைக்கழகத்தின் வேறு கட்டிடங்களை கொரோனா முகாம்களுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் விளக்கம் அளித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அதிரடி பதிலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்