திமுகவுக்கும் தவெகவுக்கும் போட்டி.. அதிமுகவுக்கு 3வது இடம் தான்.. தேர்தல் வியூக நிபுணர்கள் கணிப்பு..!

Siva

வெள்ளி, 11 ஜூலை 2025 (07:56 IST)
2026 ஆம் ஆண்டு தேர்தலை பொருத்தவரை, அதிமுகவுக்கு மூன்றாவது இடம் தான் கிடைக்கும் என்றும், உண்மையான போட்டி திமுகவுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும்  இடையில் தான் என்றும் தேர்தல் வியூக நிபுணர்கள் கருத்து கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த ஏப்ரல்-மே மாதத்தில் வெறும் ஒன்பது சதவீதம் வாக்குகள் மட்டுமே விஜய்க்கு கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு 22 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அதிமுகவை த.வெ.க. முந்திவிட்டது என்றும் தேர்தல் வியூக நிபுணர்கள் யூடியூப் சேனல்களில் அளித்து வரும் பேட்டிகளில் கூறி வருகின்றனர்.
 
மேலும், தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் உள்ளதால், இந்த எட்டு மாதத்தில் விஜய் தீவிரமாக பிரச்சாரம் செய்தால் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும், குறைந்தபட்சம் எதிர்க்கட்சி ஆகவாவது வாய்ப்பிருக்கிறது என்றும் கூறி வருகின்றனர். 
மொத்தத்தில், விஜய்யின் அரசியல்எழுச்சி இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் பெரும் சிம்ம சொப்பனமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்