மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து காயம் அடைந்த பத்திரிகையாளர் உயிரிழப்பு

ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (17:37 IST)
சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து காயம் அடைந்த புதிய தலைமுறை பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் உயிரிழந்தார்.

சென்னையில் மழை பெய்தால் ஒரு சில நிமிடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருக்கும்.  எனவே, பருவமழை காலங்களில் மழைநீர் தேங்குவதால் தவிர்க்கும் வகையில்  சென்னையில் 107 கிலோ மீட்டர் தூரத்திற்கு வடிகால் அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

இன்னும் முடிவடையாத இப்பணிகளால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் பாதிப்பு அடைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  சென்னையில். நேற்றிரவு பணி முடிந்து திரும்பும்போது ஜாபர் கான்பேட்டையில் தோண்டப்பட்டிருந்த  மழை நீர்வடிகால் பள்ளத்தில் விழுந்து காயம் அடைந்த புதிய தலைமுறை பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் மருத்துவமனையில்  
சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

புதிய தலைமுறையில் பணியாற்றும் தம்பி முத்துகிருஷ்ணன் நேற்று இரவு காசி திரையரங்கம் அருகே மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்,

எந்தவித எச்சரிக்கை பலகை இல்லாமல் சென்னை முழுவதும் இது போன்ற பல குழிகள் உள்ளது அடுத்த உயிர் போகும் வரை காத்திருப்பீர்களா @CMOTamilnadu ? pic.twitter.com/Ab8iJOB98f

— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) October 23, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்