தமிழக காங்கிரஸ் தலைவர் ஆகின்றாரா ஜோதிமணி எம்பி?

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (15:20 IST)
தமிழக காங்கிரஸ் தலைவராக தற்போது கே எஸ் அழகிரி இருக்கும் நிலையில் அவரை மாற்றிவிட்டு ஜோதிமணி எம்பி தமிழக காங்கிரஸின் புதிய தலைவராக மாற வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. 
 
திமுகவுடன் தற்போது மோதல் போக்கு உடன் இருந்தாலும் வளர்ந்து வரும் பாஜகவை சமாளிக்கவும் அண்ணாமலைக்கு அதிரடியாக பதிலடி கொடுக்கவும் ஜோதிமணி தான் சரியான ஆள் என காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்து இருப்பதாகவும் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது
 
 5 மாநில தேர்தல் முடிவு வெளியானவுடன் தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களுக்கு தலைவரை மாற்ற சோனியா உத்தரவு பிறப்பிப்பார் என்று கூறப்படுகிறது இதனை அடுத்து ஜோதிமணியின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்