பாஜக அல்லாத முதலமைச்சர்கள் மாநாடு: மம்தாவிடம் ஸ்டாலின் ஆலோசனை

திங்கள், 14 பிப்ரவரி 2022 (08:45 IST)
பாஜக அல்லாத முதலமைச்சர்கள் மாநாடு விரைவில் நடத்தப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இடம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
மேற்கு வங்க சட்டசபையை அம்மாநில கவர்னர் முடக்கியதற்கு தமிழக  முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது கண்டனத்தை டுவிட்டரில் தெரிவித்திருந்தார் என்பதும் அவருடைய கண்டனத்திற்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை மேற்கொள்ள ஆளுநர் வெளியிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மாநில உரிமைகளை காக்க திமுக எப்போதும் துணை நிற்கும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்துள்ளார் 
 
மேலும் விரைவில் பாஜக அல்லாத அனைத்து மாநில முதலமைச்சர் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இந்த மாநாட்டில் மாநில உரிமைகளை காப்பதற்காக பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்படும் என்றும் மேற்கு வங்க முதல்வரிடம் தமிழக முதல்வர் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்