தமிழகத்தில் தற்போது ஜோக்கர் ஆட்சி நடக்கிறது என கர்நாடக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் ரோஷன் பொய்க் கூறியுள்ளார். இவர் கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வாழும் சிவாஜி நகர் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தெர்ந்தெடுக்கப்பட்டவர்.
கர்நாடக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ரோஷன் பொய்க் நாகூர் தர்காவிற்கு இன்று வழிபாடுக்காக வந்திருந்தார். வழிபாட்டுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரோஷன் பொய்க் தமிழக அரசியல் குறித்து பேசினார்.
தமிழகத்தில் தற்போது ஜோக்கர் ஆட்சி நடைபெற்று வருகிறது. காமராஜர் போன்றோர் தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்தனர். அந்த மாநிலத்தில் இப்போது ஆட்சி நிலைமை இப்படி மாறியுள்ளது என்ர். மேலும், தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே நல்லுறவு நீடிக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொண்டதாக தெரிவித்தார்.