எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். அவர்கள் தற்போது புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தினகரன் அணியில் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை மேலும் இரண்டு அதிகரித்து 21-ஆக உள்ளது.
தினகரன் அணியில் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், மேலும் அந்த எண்ணிக்கையை அதிகரிக்க ரகசியமாக தினகரன், திவாகரன் களம் இறங்கியுள்ளதால் எடப்பாடி தரப்பு சற்று கலங்கியுள்ளது.
இந்நிலையில் சசிகலாவின் தம்பி திவாகரன் தங்கள் ஆதரவு நிலைப்பாட்டில் பல எம்எல்ஏக்கள் உள்ளதாக அளந்து விடுகிறார். முன்னதாக 19 எம்எல்ஏக்கள் தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த போது தங்களுக்கு 37 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது எனவும் அவர்கள் ரக்சியமாக இருக்கிறார்கள் என கூறி திகிலை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் தற்போது 8 அமைச்சர்கள் உள்பட 60 எம்எல்ஏக்களின் ஆதரவு தங்களுக்கு உள்ளது எனவும் அவர்கள் 2 நாட்களில் எங்கள் அணிக்கு வருவார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும் போக போக இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். சபாநாயகர் தனபாலை முதல்வராக்குவோம் எனவும் உறுதிபட கூறியுள்ளார் திவாகரன்.