அதிரடியில் இறங்கிய காவல்துறை! ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை சுட்டுப் பிடித்த போலீஸ்! - சென்னையில் பரபரப்பு!

Prasanth Karthick

வெள்ளி, 21 மார்ச் 2025 (08:00 IST)

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகளை காவல்துறை துரிதப்படுத்தியுள்ள நிலையில் சென்னையில் பிரபல ரவுடி சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபமாக தமிழகத்தில் நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கவும், குற்ற வழக்குகளில் தலைமறைவாக உள்ள ரவுடிகளின் பட்டியலை தயாரித்து அவர்களை பிடிக்கவும் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக ஆதம்பாக்கத்தில் நகைக்கடையை கொள்ளையடிக்க முயன்ற இருவரை போலீஸார் கைது செய்திருந்தனர்.

 

விசாரணையில் அவர்களை கொள்ளையடிக்க சொன்னது பிரபல ரவுடி ஐகோர்ட் மகாராஜா என தெரிய வந்துள்ளது. மேலும் மகாராஜா தூத்துக்குடியில் பதுங்கியிருப்பதை கண்டறிந்த போலீஸார் அவனை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். கிண்டி அருகே வந்துக் கொண்டிருந்தபோது மகாராஜா தப்பியோட முயன்ற நிலையில் போலீஸார் அவனை சுட்டுப்பிடித்துள்ளனர்.

 

இதனால் தற்போது ரவுடி மகாராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்