கல்லூரி மாணவிகள் ஜீன்ஸ், டி-சர்ட் அணியக்கூடாது: அதிரடி உத்தரவு

வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (14:20 IST)
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் இனி ஜீன்ஸ் டி-சர்ட் அணியக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் மொத்தம் 3,350 இடங்கள் உள்ளன. இந்நிலையில் இந்த இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு சமீபத்தில் நடந்தது.

இதை தொடர்ந்து, இந்த கல்வி ஆண்டிலிருந்து அரசு மருத்துவ கல்லூரி மாணவிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை மருத்துவக் கல்வி இயக்குநரகம் விதித்துள்ளது. அதில் மாணவிகள் ஜீன்ஸ், டி-சர்ட், லெக்கிங்ஸ் உள்ளிட்ட ஆடைகளை கல்லூரிக்கு அணிந்து வரக்கூடாது என தடை விதிக்கப்படுள்ளது. மாணவிகள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற ஆடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் பேண்ட். சட்டை அணிந்தும் காலில் ஷூ அணிந்தும் வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாணவ, மாணவிகள் வகுப்பறைகளில் செல்ஃபோன் பயன்படுத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ கல்லூரிகளில் ராகிங் கொடுமை தலைவிரித்து ஆடுவதால், ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்