பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட ஒன்று கூடிய மக்களால் பரபரப்பு

செவ்வாய், 30 ஜூலை 2019 (21:22 IST)
கரூர் அருகே குடிநீர், தெருவிளக்கு, தார்சாலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் பஞ்சாயத்து அலுவலகத்தினை முற்றுகையிட சென்றதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் அடுத்துள்ள பஞ்சமாதேவி  பஞ்சாயத்துக்குட்பட்ட அரசு காலனி, பள்ளிவாசல் தெரு, தங்கராஜ் நகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் உள்ள கரூர், நாமக்கல், மோகனூர்,குளித்தலை உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் ஏற்றுமதி நிறுவனம் மற்றும் விவசாய பணிகள் செய்து வருகின்றனர்.
 
 
இப்பகுதியில் சாக்கடை வசதி, தார்சாலைவசதி, குடிநீர்வசதி, உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் செய்து கொடுக்காததால் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தது கோரிக்கையை ஏற்றுக் கொண்டவர்கள் அதை பற்றி கவலைப்படாமல் அப்பணிகளை கிடப்பில் போட்டு விட்டனர் பணியை முடித்துக்கொண்டு இரவு நேரங்களில் அப்பகுதியில் செல்லும் பெண்கள் நாள் தோறும் இருட்டில் அச்சத்துடன் செல்கின்றனர் நாமக்கல் மாவட்டம் மோகனூர் செல்லும் முக்கிய பிரதான சாலை இதுதான் இப்பகுதியில் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்கள் கடந்து செல்கின்றது. சாலைகள் சரியாக இல்லாததால் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் சாலையில் செல்பவர்கள் மீது விபத்துக்களை ஏற்படுகின்றது .
 
 
அதேபோல் கடந்த ஒரு மாத காலமாக பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து இன்று பஞ்சமாதேவி பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட ஒன்று கூடினர் .
 
 
இதை அறிந்த பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் அவர்களை தடுத்து அருகில் உள்ள அரசு பள்ளி முன்பு பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையின்போது 15 நாட்களுக்குள் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி சாலை வசதி சாக்கடை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுப்போம் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர் குறிப்பாக இவர்கள் வசிக்கும் பகுதி அருகில்தான் காவிரி ஆறு வாய்க்கால் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்