இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் ஜெயிலிலும் பெயிலிலும் இருக்கிறார்கள்: ஜேபி நட்டா

Siva
திங்கள், 8 ஏப்ரல் 2024 (07:19 IST)
இந்தியா கூட்டணியில் உள்ள பாதிபேர் ஜெயிலிலும் பாதி பேர் பெயிலிலும் இருக்கிறார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா விருதுநகரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்று தமிழகம் வந்த ஜேபி நட்டா விருதுநகரில் ராதிகா சரத்குமாருக்கு பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசிய போது ’இந்த பூமி சனாதனம் பாரம்பரியம் கலாச்சாரத்தை தாங்கி நிற்கிறது என்றும் எத்தனையோ தலைவர்கள் சமுதாய மாற்றத்திற்காக உழைத்து உள்ளார்கள் என்றும் தெரிவித்தார்

பிரதமர் மோடி ஆட்சியில் தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் மொழி அனைத்தும் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்

காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே ஊழல் நிறைந்த கட்சிகள் என்றும் இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் குடும்ப கட்சிகளும் என்றும் இந்த கூட்டணியில் உள்ள பாதி பேர் ஜெயிலிலும் மீதி பேர் பெயிலிலும் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்

ப சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் மீது ஊழல் வழக்கு உள்ளது என்றும் அவர்கள் ஜாமீனில் தான் இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்