ஜெயலலிதா குறித்து வெளியான செய்தி வதந்தி: அப்பல்லோ விளக்கம்!

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2016 (18:13 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்து விட்டார் என சற்று முன்னர் ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில் அந்த செய்தி உண்மையில்லை எனவும் முதல்வர் ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் குழு போராடி வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை விளக்க அறிக்கை வெளியிட்டு வதந்திக்கு விளக்கம் அளித்துள்ளது.


 

 
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் என்ற வதந்தி வெளியானதும். அப்பல்லோ மருத்துவமனை முன்பு குவிந்திருந்த அதிமுக தொண்டர்கள் கதறி அழுதனர். இதனையடுத்து ஜெயலலிதா குறித்தான வதந்தி செய்தி காட்டுத்தீ போல பரவியது. அதிமுக கொடி கூட அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இதனால் பதற்றமான சூழல் தொற்றிக்கொண்டது.





 
 
இந்நிலையில் இந்த தகவல் வெறும் வதந்தி எனவும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உயிர் காக்கும் கருவிகளின் துணையோடு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருவதாக அப்பல்லோ மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா இந்த மருத்துவ போராட்டத்தின் பின்னர் எடுத்து மீண்டு நலம்பெற்று நம்முன் திரும்பி வர இறைவனை பிராத்திப்போம்.
அடுத்த கட்டுரையில்