கடைசியாக 6 மணி நேரம் என்னுடன் பேசிய ஜெயலலிதா: சொல்கிறார் போட்டி சின்னம்மா!

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2016 (11:11 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி இரவு காலமானார். இதனையடுத்து அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் என்ற விவாதம் ஆரம்பித்துள்ளது. சின்னம்மா சசிகலா தான் வர வேண்டு என கட்சியின் முன்னணி தலைவர்கள் கூறுகின்றனர்.


 
 
ஆனால் சிலர் தீபாதான் சின்னம்மா எனவும் அவர்தான் தலைமையை ஏற்கவேண்டும் எனவும் கூறி போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த போட்டி சீன்னம்மா தீபா ஜெயலலிதாவுடன் தான் இருந்த நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.
 
அதில், 1997-ஆம் ஆண்டு அத்தை ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட போது நேரில் சென்று பார்க்க போனபோது வெளிப்படையாக பிரச்சனை குறித்து பேசினேன். அப்போது நீ குழந்தை உனக்கு ஒன்றும் தெரியாது. நீ வீட்டுக்கு போ நான் வெளியே வந்ததும் பார்க்கிறேன் என கண்டித்து அனுப்பினார். அதன் பின்னர் பலமுறை அவரை பார்க்க முயற்சித்தேன் ஆனால் காவலர்களால் துரத்தப்பட்டேன்.
 
தான் கடைசியாக 2002-ஆம் ஆண்டு அத்தை ஜெயலலிதாவை இரண்டாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற போதுதான் மீண்டும் சந்திக்க முடிந்ததாக கூறினார். அப்போது பல விஷயங்களை அவருடன் பேசினேன். தந்தை குறித்து பேசினேன்.
 
எங்கள் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் கூடயெல்லாம் நடந்தது. எங்களை அவர்கள் வளர்த்த விதத்தையெல்லாம் கூறி அத்தையிடம் சண்டையிட்டேன். என்னை சமாதானப்படுத்துவதற்காக என்னுடன் 6 மணி நேரம் செலவழித்தார். பின்னர் வீட்டுக்கு போ நான் பின்னர் வந்து உன்னை பார்க்கிறேன் என்றார். அதுதான் அவரை நான் கடைசியாக பார்த்தது என கூறியுள்ளார் தீபா.
 
அடுத்த கட்டுரையில்