சைகையில் பேசும் ஜெயலலிதா: உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்!

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2016 (13:42 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து வதந்திகள் பரப்பியவர்களுக்கு தற்போது வரும் செய்திகள் சிறந்த பதிலடியாக இருக்கிறது.


 
 
முதல்வருக்கு லண்டன் மருத்துவர் ரிச்சார்ட் பீலேவின் மேற்பார்வையில் மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வந்தது. அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பதால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. மேலும் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகளால் ஏற்படும் வலியை தவிர்க்க மயக்க மருந்து கொடுக்கப்பட்டு வந்தது.
 
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
அதில், முதல்வர் ஜெயலலிதா படுக்கையில் இருந்து எழுந்து உட்காருவதாகவும், சைகையில் பேசுவதாகவும், அதுவும் அவருக்கு செயற்கை சுவாசம் அளித்து வருவதால் சைகை மொழியில் பேசுவதாகவும், அவை அகற்றப்பட்டபின்னர் வழக்கம் போல பேசுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.
 
மேலும், தற்போது அவருக்கு வழங்கப்பட்டு வந்த தூக்க மாத்திரைகள் நிறுத்தப்பட்டுள்ளது. அவரது நுரையீரலில் இருந்த தண்ணீரை வெளியேற்றிவிட்டனர், மேற்கொண்டு எந்த நீரும் தேங்கவில்லை என கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்