தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். அவரது மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என ஓபிஎஸ் அணியினர் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து அவரது அண்ணன் மகள் தீபா பரபரப்பு தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
இன்று காலை ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு அவரது அண்ணன் மகள் தீபா சென்றார். அவரது தம்பி தீபக்கின் அழைப்பின் பேரிலேயே அவர் அங்கு சென்றுள்ளார். ஜெயலலிதாவின் படத்துக்கு மரியாதை செலுத்து அழைத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் தீபா அங்கு தடுக்கப்பட்டதாகவும், உள்ளே உள்ள பாதுகாவலர்களால் தான் அடித்து துறத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தீபக் சசிகலாவுடன் சேர்ந்து இந்த சதி செயலில் ஈடுபட்டதாக தீபா கூறினார்.
இதனையடுத்து தீபா வைத்த குற்றச்சாட்டு பகீர் ரகம். அதாவது முன்னாள் முதல்வரும் தனது அத்தையுமான ஜெயலலிதாவை தமது சகோதரர் தீபக்கும் சசிகலாவும் சேர்ந்து பணத்துக்காக கொன்றுவிட்டதாக ஒரே போடாக போட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.