அமெரிக்காவில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிட ஜெயலலிதாவே காரணம் - சட்டசபையில் சுவாரஸ்யம்

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2016 (04:57 IST)
அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில், முதன்முறையாக, ஒரு பெண் போட்டியிடுகிறார் என்றால், அதற்கு முழு முதல் காரணம் முதல்வர் ஜெயலலிதா என்று குன்னுார் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராமு சட்டசபையில் பேசியுள்ளார்.
 

 
இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் சட்டத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய ராமு, ”அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண், அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார் என்றால் அதற்கு முழு முதற்காரணம் முதல்வர் ஜெயலலிதா.
 
அமெரிக்க வெளியுறவு அமைச்சராக, இந்தியாவிற்கு வந்த ஹிலாரி கிளிண்டன், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்ததன் எதிரொலியே, அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது. அவர் முதல்வரை சந்தித்தது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக, உலகம் புகழ்ந்து கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்