வழக்கில் இருந்து தப்பிக்க மோடியிடம் ஆலோசனை கேட்ட ஜெயலலிதா: போட்டுத்தாக்கும் இளங்கோவன்

Webdunia
வியாழன், 16 ஜூன் 2016 (15:42 IST)
கடந்த 14-ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி சென்று சந்தித்து தமிழக நல்னுக்கான 29 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். இந்நிலையில் ஜெயலலிதாவின் இந்த சந்திப்பு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.


 
 
முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜராக சென்ற தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது பேசிய அவர் முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்கள் நலனுக்காக பிரதமரை சந்திக்கவில்லை. தன் மீதான வழக்குகளில் இருந்து எப்படியாவது தப்பிக்க முடியுமா? என பிரதமரிடம் ஆலோசனை கேட்பதற்காக சென்றார் என கூறினர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்