தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இறந்தார். இந்நிலையில் அவரை பற்றி ஜெயலலிதாவின் தங்கை சைலஜாவின் மகள் அம்ருதா பெங்களூர் மிர்ரர் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
இந்த பேட்டியில் ஜெயலலிதாவை தான் மூன்று முறை சந்தித்து இருப்பதாகவும். தாங்கள் சந்திக்கும் போது கன்னடத்தில் தான் வழக்கமாக பேசுவோம் என அவர் கூறினார். மேலும் லட்சக்கணக்கான தொண்டர்கள் தனக்கு இருந்தும் தான் தனிமையில் இப்பதாகவே உணர்வதாக ஜெயலலிதா குறியதாக அம்ருதா கூறியுள்ளார்.
சசிகலாவின் கை ஓங்கிய பின்னர் பெரியம்மா ஜெயலலிதாவை பார்க்க முடியவில்லை. அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தும் அவரை பார்க்க அனுமதிக்கவில்லை. போலீசார் வாசலிலேயே தடுத்து நிறுத்திவிட்டனர். யாரையுமே சந்திக்க அனுமதிக்காதது வருத்தம் அளிக்கிறது என்றார் அம்ருதா.